புதினங்களின் சங்கமம்

யாழில் கொடூரர்களால் கொல்லப்பட்ட தனது அம்மாவைத் தேடி நடுவீதியில் அலையும் பிஞ்சு!! (வீடியோ)

இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணப்படும் பசுக்கன்று தனது தாயினைத் தேடி பசியுடன் அலைந்து திரிகின்றது. பொன்னாலை மேற்கில் உள்ள எனது கோமாதா இல்லத்தில் உள்ள பசுவே இவ்வூரைச் சேர்ந்த திருடர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது என்பதனை மிகவும் கவலையுடன் பதிவு செய்கின்றேன். கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் வயிற்றில் சிசுவுடன் இருந்த பெறுமதியான பசுவும் இறைச்சிக்காக கடத்தப்பட்டு வெட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பொன்னாலைப் பகுதியில் உள்ள சில திருடர்களால் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் நிகழ்கின்றமையையிட்டு கிராம மக்கள் மிகவும் கவலையடைகின்றனர். இப் பசுக்கள் பொன்னாலை வரதராஜப் பெருமாளுக்கு நித்திய பூசைக்கு பால் வழங்கும் சேவையை செய்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கோமாதாக்களை தெய்வங்களாக வழிபடும் எம்மவர் மத்தியில் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் மனதினை கனக்கச் செய்கின்றன. இவ்விடயம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமையால் இம்முறைப்பாட்டினை எல்லாவற்றிற்கும் நீதியினை வழங்குகின்ற பொன்னாலை வரதராஜப் பெருமாளிடம் சமர்ப்பிக்கின்றோம்.