புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் யாழ் குடாரப்பு பகுதியில் சடலமாக மீட்பு.!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் யாழ் குடாரப்பு பகுதியில் சடலமாக மீட்கப்படுள்ளார்.

பி.ரவிச்சந்திரன் (39) புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியைச் சேரந்த மீனவனே சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக ஞாயிறு (12) மாலை சென்றிருந்தார்.

இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது.

இதன் போது ஒரு மீனவன் நீந்தி கரை சேர்ந்துள்ள நிலையில் குறித்த மீனவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (14) அதிகாலை யாழ் குடாரப்பு பகுதியிலேயே சடலம் கரையோதுங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.சிவராசா மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.