புதினங்களின் சங்கமம்

செல்பி எடுத்த மகள் ஆற்றுக்குள் வீழ்ந்தாள்.!! காப்பாற்ற குதித்த தந்தையும் பலி!! காத்தான்குடி குடும்பத்திற்கு பொலனறுவையில் நடந்த சோகம்!!

பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை ஆற்றை பார்வையிடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று(07) காலை காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது46) மற்றும் அவரது பிள்ளைகள் அடங்களாக 5 பேர் பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை ஆற்றை பார்வையிட சென்றுள்ளனர்.

ஆற்றின் நீரோட்டத்தை பார்த்துக் கொண்டு ஆற்றின் அருகில் நின்று கொண்டிருந்த போது ஆசிரியரின் மகள் சயான் பர்சத் (12 வயது) ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

தனது மகளை காப்பாற்ற தந்தை ஆற்றினுள் இறங்க இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நிலையில், இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

May be an image of 1 person, standing, tree and outdoorsMay be an image of 6 people, people standing and grassMay be an image of 1 person, body of water and treeMay be an image of 1 personMay be an image of 1 person and beard