புதினங்களின் சங்கமம்

காதல்க்கோட்டையாகும் நல்லூர் மந்திரிமனை; சமூகப்பிறழ்வுகள் !! Video

யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பராமரிப்போ, கண்காணிப்போ இன்றி காதலர்கள் ஓய்வுக்கூடமாக மாறியுள்ளது.

தமிழ் வரலாற்றில் எஞ்சியுள்ள ஓரிரண்டு தொல்லியல் சின்னங்களில், யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி மற்றும் மந்திரி மனை என்பன முக்கியமானவை. எனினும், அவை முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

இதில் சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி என்பன தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ். மாநகரசபையினால் அடையாளப்படுத்தி பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள நிலையில் மந்திரிமனை எந்தவொரு அடையாளப்படுத்தல், பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

ஏற்கனவே தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பெயர்பலகை வர்ணப் பூச்சினால் மறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பராமரிப்பின்றி காணப்படும் மந்திரிமனைக்குள் காதலர்கள் ஒன்று கூடுமிடமாக மாறியுள்ளது. தொல்லியல் சின்னமான அந்த கட்டட சுவர்களில் காதலர்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருகிறது. அத்துடன், மது அருந்துபவர்கள் மற்றும் சமூகப் புறழ்வுகளில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி வருவதாக அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுச் சின்னமொன்று அழிவதற்கு முன்னர் சம்பந்தபட்ட தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மந்திரி மனையை காக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.