புதினங்களின் சங்கமம்

பூநகரி – பரந்தன் வீதியில் கோர விபத்து, ஒருவர் பலி! வீதியில் நெல் காயப்போட்டதால் விபரீதம்…

கிளிநொச்சி – பரந்தன் – பூநகரி வீதியில் ஓசியர் கடைச் சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த விதியில் நெல் உலர விடுவதனால் குறித்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்ததாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

May be an image of 6 people, people standing, tree and road