புதினங்களின் சங்கமம்

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா!!

அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சர் பதவிகளை அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் உதறியுள்ளனர். அலரி மாளிகையில் தற்போது (03) நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.

முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறப்பதாக அறிவித்தனர்.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகியோர் பதவி துறந்தனர்.

அமைச்சு பதவியை துறந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசையில் அமரவுள்ளதாகவும், இன வன்முறை தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணையின் வெளிப்படை தன்மைதான், அரசின் ஆயுளை தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்