புதினங்களின் சங்கமம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 139 தமிழர்கள் உட்பட 1289 பேர் கைது!!

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர்
நாடுமுழுவதும் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இன்றுவரை 2
ஆயிரத்து 289 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ்
அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அவர்களில் 139 பேர் தமிழர்கள், 330 பேர் சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் ஆயிரத்து 820
பேரும் அடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைதுசெய்யப்பட்ட 2 ஆயிரத்து 289 பேரில் ஆயிரத்து 655 பேர் பிணையில் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்.

423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 211 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ்
அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.