மனைவியில் சந்தேகம்!! ஜேர்மனியில் யாழ்ப்பாண குடும்பப் பெண் உயிர் துறக்க முயற்சி!! கணவனைக் கைது செய்தது பொலிஸ்!!
ஜேர்மன் பேர்ளின் பகுதியில் 42 வயதான தமிழ்க் குடும்ப்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தன்னுடன் வேலை செய்யும் இளைஞர் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக கணவரால் சந்தேகிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதனையடுத்து குறித்த பெண் வீட்டின் அறையை பூட்டி பிளேற்றினால் வயிறு மற்றும் கையை அறுத்த தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட போது பெண்ணின் சிறுவயதுப் பிள்ளைகள் பொலிசாருக்கு அறிவித்ததால் விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவத்தை அடுத்து வைத்தியசாலையில் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணின் தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் கண்டல் காயங்கள் இருந்ததை பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். பொலிசாரின் விசாரணையில் கணவரால் தாக்கப்பட்டதாக பெண் கூறியதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானவர் என குறித்த பெண்ணின் நண்பிகள் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
