அன்புத் தம்பியே! அழகான தங்கையே! நேற்று நடந்த வீதி விபத்தில் இழந்து விட்டோம் !! (Video)
தனது பிறந்தநாளில் விபத்தில் உயிரிழந்த மகன் பாரி… மகள் நிலாவும் மரணம்…. தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்….
அன்புத் தம்பியே! அழகான தங்கையே! நேற்று நடந்த வீதி விபத்தில் இழந்து விட்டோம் உங்களை நாம். எம்மினத்தில் பல உறவுகள் வீதி விபத்துகளால் மரணிக்கும் நிகழ்வு இன்று உலகெங்கும் அரங்கேறி வருகிறது. அண்ணாவும், தங்கையும் இப்போ மீளாத் துயில் கொள்வீர்கள் . ஆனால் உங்களைப் பெற்றவர்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கிறேன். பத்து மாதங்கள் பக்குவமாய் கருவில் சுமந்து , பெற்றெடுத்த உங்களை கொட்டும் பனியில் குளிராது காத்து, பள்ளி வயதை அடைந்ததும் வாகனத்தில் உங்களை ஏற்றி , இறக்கி, நீங்கள் வளர்ந்து உயர்தரப் பாடசாலை செல்ல, தம்மை வருத்தி உழைத்த பணத்தில் பல மடங்கை உங்களுக்காய் செலவழித்து, பல்கலைக்கழகம் நீங்கள் செல்ல……கற்று முடித்ததும் என் மகளும் , என் மகனும் வெகு விரைவில் நல்ல ஆசிரியராக … வைத்தியராக …..கணக்காளராக … சமூக ஆர்வலர்களாக …..சட்டத்தரணியாகப்… பட்டங்கள் பெற்று இப் பாரில் மிளிர்வார்கள்.எங்களை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வார்கள். நாம் பட்ட கஸ்டங்கள் முடிவுக்கு வரப் போகின்றன என்ற கனவோடு தினம் தினம் வேலை , வீடு என்று தூங்க நேரமின்றி ஓய்வின்றி உழைத்த உங்கள் பெற்றோரை யார் தேற்றுவர்? எதைச் சொல்லித் தேற்றுவர்? நீங்கள் வாகனம் ஓட்டுவதற்குரிய அனுமதிப்பத்திரம் பெற்ற பின் car வேண்டும் என்பீர்கள் . அரை மனதோடு அதையும் கடனட்டையில் தான் உங்கள் பெற்றோர்கள் வாங்கித் தருவார்கள். படித்து முடிக்கும் வரை உன் கடனை நான் அடைக்கிறேன் என்று சொல்லி , உடல் தள்ளாடும் வயதிலும் , முழு நேர வேலையோடு , பகுதி நேர வேலை ஒன்றிலும் , புதிதாகச் சேர்ந்து இரவும் , பகலும் , ஓடாய்த் தேய்வார் உங்கள் தந்தை…. அன்புச் செல்வங்களே!!! விபத்தை தவிருங்கள். அவதானமாக வாகனங்களைச் செலுத்துங்கள். ஒரு நொடி போதும் உங்கள் உயிர் பிரிவதற்கு. ஆனால் ஒரு யுகம் போதாது அதன் வலி மறைவதற்கு. தம்பி ! தங்கைகளே! வாகனத்தை கையில் எடுக்கும் போது தொலை பேசியிலோ! வேறெந்த விடயத்திலோ கவனம் செலுத்தாதீர்கள். ஏன்? அருகில் இருப்பவரிடம் கூட அதிகமாகப் பேசாதீர்கள். உங்கள் கவனம் அனைத்தும் வாகனத்திலும், வீதியிலும் இருக்கட்டும். பிழை , சரி யார் பக்கம் இருந்தாலும் பிரிவது உயிர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். தவிருங்கள் விபத்துக்களை! தவிருங்கள் உயிர் இழப்புகளை! நீங்கள் வாழ வந்த பிள்ளைகள். பாதியிலே போகும் போது தவிக்கிறது எம் உள்ளங்கள். இன்று மார்க்கம் நகரே உங்களை இழந்த சோகத்தில் கண்ணீர் வடிக்கிறது. இயற்கை அன்னையும் எம்மோடு சேர்ந்து கண்ணீர் வடிக்கிறாள். இறைவா!!! இரக்கம் சிறிதுமின்றி இவர்களைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விட்டாய் . எனியேனும் மனமிரங்கி இப்பிஞ்சிகளின் பெற்றோரை , உறவுகளை , நண்பர்களை , எப்படியாவது தேற்றி விடு.![]()
![]()
![]()
.( எமக்கு நடக்கும் வரை இது வெறும் செய்தியே!! என எண்ணி விடாதீர்கள். இம் மரணம் உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்ததாய் எண்ணி! பெரியோர்களும் , சிறியோர்களும் அவதானமாக , கொஞ்சம் பொறுமையாக , நிதானமாக வாகனத்தைச் செலுத்துங்கள். எனி வரும் காலங்களில் இது போன்ற இழப்புக்களைத் தவிர்ப்போம். அனைவரும் மகிழ்வுடன் வாழ்வோம்). ![]()
![]()
![]()

