முல்லைத்தீவில் கொடூரம்!! சிவில் பாதுகாப்பு படை பெண் வெட்டிக் கொலை!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்று (07)இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையணியில் கடமைபுரியும் பெண்ணொருவர்வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவது கணவனாலேயே அவர் வெட்டிக்கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மட்டக்களப்பை சேர்ந்த இரண்டாவது கணவன் தலைமறைவாகி விட்டார்.மூங்கிலாறு வடக்கில் வி.காந்தரூபி அல்லது ஜெயா (44) என்பவர் வசித்துவருகிறார். இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையணியில் அவர் பணிபுரிகிறார்.விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியொருவரை அவர் திருமணம்செய்திருந்தார். யுத்தத்தின் இறுதி சமயத்தில் அவர் உயிரிழந்து விட்டார்.யுத்தத்தின் பின்னர், இன்னொரு திருமணம் செய்திருந்தார். அவர் மட்டக்களப்பைசேர்ந்தவர். இரண்டு திருமணங்களின் மூலமாக 3 பிள்ளைகள் இருந்தனர்.இரண்டாவது திருமணமாகி சிறிது காலத்திலேயே தம்பதிகளிற்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். இரண்டாவது கணவன் மட்டக்களப்பிலேயே வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை மங்கிய நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய,காந்தரூபியின் மூத்தமகன், வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயார்கிடந்ததை கண்டு, கூச்சலிட்டார். அயலவர்கள் ஒன்றுகூடி, பொலிசாருக்கு தகவல்தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து,சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர்.சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றுஇடம்பெற்றதாகவும், அதை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது,மட்டக்களப்பில் இருந்து வந்திருந்த இரண்டாவது கணவனிற்கும் அவருக்குமிடையில்வாய்த்தர்க்கம் ஏற்பட்டே இந்த கொலை நிகழ்ந்துள்ளது. கொலையை செய்து விட்டுஇரண்டாவது கணவன் தப்பிச் சென்று விட்டார்.அவர் மட்டக்களப்பில் இருந்து பேருந்தில் வந்திறங்கியதை அந்தபகுதியிலிருந்த சிலர் நேரில் கண்டுள்ளனர். இதனடிப்படையில் அவரே கொலையைசெய்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.