முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் கனேஷ் என்ற காவாலி தொடர்பில் பல முறைப்பாடுகளை பொதுமக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.
இந்தக் காவாலி கடந்த 10 ஆண்டுகளாக மரக்கடத்தல் மற்றும் மண்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் இந்தக் காவாலி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை வழங்கி, அவர்களை இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு மற்றும் தேராவில் போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் இந்தக் காவாலியிடமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு இவனுக்கு உதவியாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
குறித்த காவாலிக்கு எதிராகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இவரது இத்தகைய சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஊடகங்கள் மூலம் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.





