யாழில் உழவு இயந்திரத்தை இயக்கிய மகன்~கீழே படுத்திருந்த தந்தைக்கு நேர்ந்த கதி..!
உழவு இயந்திர பெட்டியின் சக்கரம் ஏறியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திர பெட்டிக்கு கீழே தந்தை படுத்திருந்ததை அறியாத மகன் உழவு இயந்திரத்தை இயக்கியபோது சக்கரம் தந்தையின் இடுப்பு பகுதியால் ஏறியுள்ளதாக கூறப்படுகின்றது.
காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

