புங்குடுதீவில் சுவிஸ்லாந்தைச் சேர்ந்தவர்களால் ‘ புரட்சி” ஒன்று (Photos)!!
இந்தவருடம் புங்குடுதீவில் ‘விவசாய புரட்சி” ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது!!
புங்குடுதீவில் நீண்ட (40வருடம்) காலமாக பயன்படுத்தாமல் கிடந்த அனைத்து வயல் நிலங்களும் உழுதுவிதைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 7ம், 8ம் வட்டாத்தில் வயல்க்காணி ஒன்றுகூட விடாமல் விதை்துள்ளார்கள்.
கட்டாக்காலி மாடுகளுக்காக பல இலட்சம் ரூபாய் செலவழித்து அடைத்து விதைத்துள்ளார்கள்.
மழையை நம்பி விதை்துள்ளோம். தைமாதத்தில் நமது ஊர் ”சின்ன வட்டக்கச்சி” போன்று காட்சியளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொருவரின் வீட்டிலும் ஆகக்குறைந்தது 5மூடை நெல் இருந்தாலே போதும் பஞ்சமில்லாமல் வாழலாம்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் கோயிலுக்கும், ஐயர்மாருக்கும் வீணாக காசை கொட்டிக்கொகொடுக்காமல் உங்கள் காணிகளை அடைத்து விதையுங்கள்.
எக்கேடு கெட்டு பேனாலும் பறுவாயில்லை என்ற மனப்பான்மையுடன் நீங்கள் இருப்பீர்களானால், வெகுவிரைவில் உங்கள் பூர்வீக சொத்துகளை நீங்கள் உரிமை கொண்டாட முடியாமல் போகும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வார்” -திருக்குறள்.
விளக்கம்: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
நன்றி….
Kirushnapilai Baskaran













