புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கோர விபத்து~இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்..!

கிளிநொச்சி நகரப்பகுதியில் அன்றையதினம்26.08.2022 இரவு 9.30 மணி அளவில் கிளிநொச்சிப்பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் பரந்தன் பகுதியில் இருந்து முருகண்டி நோக்கி பயணித்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயனித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.