
மாத்தறை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் நேற்று (29.01.2026) மாலை தப்பிச் சென்றுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்ற கைதி பாணந்துறை, குருப்புமுல்லவைச் சேர்ந்தவர். அவர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
நேற்று மாலை சிறைச்சாலை வளாகத்தில் கண்காணிப்பாளரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரியாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த கைதி தனது நன்னடத்தை காரணமாக சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.




