கொழும்பில் விவாகரத்து கேக்கும் தமிழ்க் குடும்பப் பெண்களுடன் கும்மி அடிக்க நினைக்கும் வக்கில்கள்!! நடந்தது என்ன? போட்டுடைக்கின்றார் சிங்கப் பெண்!!
சினிமாவில் மட்டுமா அஜஸ்மன்ட் adjustment ?
Tv ல் ஒருபடம் டப்பிங் போல , நயன்தாரா வைபோவ் , நயன் என்றதும் எப்பிடிப்பட்ட படம் என்றாலும் பார்ப்பேன்.
அதில் நயன் கணவனை தொலைத்து விட்டு தேடுகிறாள் ஒரு பொலிஸ் அதிகாரி சொல்கிறார் கணவன் வேண்டுமானால் தன்னுடன் ஒரு பொழுதை கழிக்கச்சொல்லி ……..
இது சினிமாகதை இப்பிடி எவரும் நடப்பார்களா ?
ஒரு பெண்ணால் எப்படி முடியும் ?
அதுவும் அந்த மனநிலையில் ?
ஒரு நாள் நான் விவாகரத்து எடுத்தே ஆகவேண்டும் என எண்ணி பல மாதங்களாக பாவனையில் இல்லாத எங்கள் வீட்டு land line ஆனால் rent கட்டப்படுக்கொண்டு இருந்தது , அதை ஒரு வாறு சரிப்படுத்தி lawyer ஒருவர்க்கு call எடுத்து விவாகரத்து எடுக்கவேண்டும் என்று சொன்னேன்,
அவர் உடனே ஒரு hotel address சொல்லி அங்கு வரச்சொன்னார், கைகுழந்தையுடன் அங்கெல்லாம் வரமுடியாது சேர் office address தாங்கோ என்றேன் அவரும் தந்தார்.
சில நிமிடங்களில் உனது கணவன் ஒரு பெண்ணோடு ஒரு hotel ல் இருக்கிறார் உடனே புறப்பட்டு வா கையும் கழவுமாக பிடிக்கலாம் என்றான் ஒருத்தன்.
நான் பெரிய சத்தமாக சிரித்து விட்டு phone ஐ வைத்தேன். Phone ஐ மட்டுமல்ல divorce எண்ணத்தையும்.
காரணம் ஒண்டு
என் கணவன் பெண்கள் விடையத்தில் ஒழுக்கமானவர் என்று 100 % எனக்கு தெரியும்.
இரண்டு land line number ஒருவர்க்குமே தெரியாது அந்த லோயர்க்கு மட்டும் தான் தெரியும் 





நாங்கள் hospital quarters ல் இருந்த போது, எனது 9 மாத மகனுக்கு Diarrhea தொடங்கிவிட்டது கணவன் கொழும்புக்கு பரீட்சை அலுவலாக போய்விட்டார். நான் மகனோடு தனிய இருந்தேன். பக்கத்து குவாட்டஸ்சில் இருந்த புது தம்பதிகளோடு நல்ல நட்பு எனக்கு மட்டும் , கணவன் பெரிதாக பழகியது இல்லை , அந்த பெண் நிறைய சமையல்கள் என்னிடம் கேட்டு செய்வார், அவர் கணவனுக்கு எனது உணவுகள் என்றால் போதும் அந்தளவு பிடிக்கும் என்பாராம். எனது மகனை தூக்கி வைத்திருப்பார்கள் என்னை விட இளமையானவர்கள்.
அவர் hospital லில் சரேந்திரஜித் கொடுத்து வைத்தவர் மனைவி சமையல் சொல்லி வேலையில்லை என்பாராம் அடிக்கடி. அந்த தம்பதியினர் எனது கணவனிடம் பயப்பிட வேண்டாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர், வயிற்றோட்டம் ஒரு நாள் சமாளித்தோம் , பக்கத்து மனைவிக்கு duty கணவன் ஓடி ஒடி வந்து பார்ப்பார், பயப்பிட வேண்டாம் பயபிடவேண்டாம் என்று கையை கையைப் பிடிப்பார் நான் கவலையில் என்ன நடக்கிறது என்று யோசிக்கவில்லை வயதில் இளமையானவர் வேறு ,
அடுத்த நாள் antibiotic தொடங்கியாச்சு,
கை தோளாக மாறியது சுதாகரித்துக் கொண்டேன், திடுக்கிட்டு தள்ளிப்போக ஏன் ஏன் எண்டு சொல்லி அணைத்தார், தப்பி வெளியில் வந்து நிண்டேன்,
கணவனும் இல்லை மகனை காப்பாற்ற வேண்டாமா ஏன் ஓடுறிங்கள் எண்டார். கண்னெதிரே pediatric ward உள்ளது, விறு விறு என்று அங்கு போய் இருந்து விட்டேன் மகனுடன். பின்னர் இங்கு நவலோகா வந்து தான் மகனை காப்பாற்றினோம் அந்தளவு கடுமை.

ஒரு பாலியல் தொழில் புரிபவளால் கூட இப்படி நடக்க முடியுமா ?
பெண்மைக்கும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா ?

நயனின் அந்தப்படம் வாயை திறக்க வைத்தது

அனைத்து பெண்களுமே சின்ன சின்ன சில்மிசங்களை கடந்து தான் வருகின்றோம், கடைக்காரர் மிச்ச காசு தரும் போது, ஏன் கோவிலுல் வீபூதி தரும் போது இதாவது கையை தொடுகின்றனர்,
Church ல் சற்பிரசாதம் தரும் போது உதட்டை எல்லோ நசித்து விட்டாரம் ஒருவர் 




உங்களின் உணவுக்கு மட்டுமல்ல , கணவனை குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்க்கும் குணம் என்னை ஈர்த்தது வயசு கோளாறு வேறு, sorry akka என்றார் 


Abi Thushy facebook