புதினங்களின் சங்கமம்

இராசயனம் என்னும் பெயரில் இறக்குமதியாகும் சட்டவிரோத புகையிலை- அம்பலமானது உண்மை

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட 11 ஆயிரத்து 400 கிலோகிராம் நிறையுடைய புகையிலை தொகையை மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுங்கப்பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், இங்குறுகடை சந்திப்பகுதியில் இருந்து குறித்த புகையிலை தொகையானது நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இராசாயன திரவமொன்று இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்து இந்த புகையிலை தொகை கொண்டுவரப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்டுள்ள இந்த புகையிலை தொகையானது 35 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.