இன்றைய இராசிபலன் (29.05.2019)
மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். சிறப்பான நாள்.
மிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக்கூறுவார். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
கன்னி: சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
தனுசு: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
மகரம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
கும்பம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உடல் நிலை சீராகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.