புதினங்களின் சங்கமம்

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் மரணம்..!

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பம் இயக்கச்சி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்று அந்நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கரவெட்டி, கட்டைவேலியைச் சேர்ந்த அனுரா அனுஷாந் (34 ) என்பவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த வேளை படிக்கட்டில் ஏறும் போது தவறி விழுந்தார்

தலையில் பலத்த அடி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.