30 வயதாகியும் திருமணம் முடிக்காமல் இருப்பவர்களின் கவனத்துக்கு!!

“”””””””””””””””””””””””””””””””””””””””””
👭🏻35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 100க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்
👭🏻30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.
👭🏻காரணம் எதிர்பார்ப்பு அதிகரித்ததே
அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் ஒருசில ஏக்கர் இருக்க வேண்டும்.
👭🏻அவரே Post graduate degree முடித்து, சென்னை, நல்ல வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.
👭🏻குறைந்தது 75,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.
👭🏻பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்களும் அவர் வீட்டாரும் விரும்புவதில்லை
👭🏻வீட்டுக்கு ஒரே பையனாக இருந்தால் நல்லது தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் #விஜய், #அஜித், #சூர்யா போல் இருக்க வேண்டும்.
👭🏻ஆண்களின் எதிர்பார்ப்பு
பெண்ணின் தந்தை செல்வந்தராக இருக்க வேண்டும் பெண் பெயரில் நிறைய சொத்தும் சம்பாதிப்பவளாக வும்
இருக்க வேண்டும்,எல்லாவகையிலும் ஆணை அனுசரித்து நடக்கவேண்டும்
இறுதியாக பெண் நயன்தாரா,
அனுஷ்கா,
தமன்னா போலிருக்க வேண்டும்.
👭🏻1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று எண்ணி இருந்தால் இந்த தலைமுறையே இருக்காது.
👭🏻இதன் விளைவுகள் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிக அளவில் இருப்பது.
👭🏻ஒரு வகையில் ஜாதகமும் திருமணத்திற்கு தடங்கலாக இருக்கிறது.
மேலும் சில தகவல்கள்………
👭🏻1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலர் 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.
1980க்கு பின் 80விழுக்காடு இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டனர்.
எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.
👭🏻2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.
ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.
👭🏻இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..
👭🏻1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்
உணவு: ராகி, கம்பு, சோளம்.
👭🏻1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.
உணவு: அரிசி
👭🏻1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25
உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.
👭🏻2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..
உணவு: துரித உணவு.
👭🏻2010க்கு மேல்
மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு
தரம் குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உட்கொண்டதன் விளைவால் மலட்டுத்தன்மை மற்றும் நோயின் தாக்கம் அதிகரித்தது.
👭🏻இந்நிலையில் பெண்கள் 28வயதுக்கு மேல் 35 வயது வரையிலும் ஆண்கள்
30 வயது முதல் 40 வயது வரையிலும்
திருமணம் ஆகாமல் அதிகளவில் இருக்கிறார்கள்.
👭🏻வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.
👭🏻திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம்.
முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம்
முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.
👭🏻எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மட்டும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யுங்கள்.
👭🏻 குடும்பம் மிக முக்கியமானது
அதற்கு பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.
👭🏻கல்வியறிவு, ஒழுக்கம், நல்லகுணம், சுறுசுறுப்பு, உழைக்கும் எண்ணம் உள்ள ஆணா, பெண்ணா
என கண்டறிந்து மண முடியுங்கள்…
வாழ்க்கை இனிமையாகும்.
#படித்ததில்_பிடித்தது

பேஸ்புக் பக்கம்…..

error

Enjoy this blog? Please spread the word :)