யாழ் பல்கலைக்கழக வாசலில் மாணவிக்கு அசிற் வீச ஆயத்தமாகிய முன்னாள் காதலன்!! பெரும் பரபரப்பு!!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்பாக இன்று காலை 8 மணியளவில் புதுமுக மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசுவதாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம பல்கலைகழகத்தின் புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாகி வழிப்படுத்தல் நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகழறது.
இன்று காலை 8:00மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வழிப்படுத்தல் நிகழ்விற்க்காக வந்த பல்கலைக்கழக புகுமுக மாணவி ஒருவர் மீது அசிட் வீசப் போவதாக இளைஞன் ஒருவர் திடீர் மிரட்டல் விடுத்தார்.
தண்ணீர் போத்தல் ஒன்றை கையில் வைத்திருந்தபடி, மாணவி மீது அசிட் வீசப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அவ்வழியே வந்த சிரேஷ்ட மாணவர்கள் குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து மாணவியினை வழிப்படுத்தல் நிகழ்விற்கு அனுப்பிவிட்டு, இளைஞனை பிடித்து விசாரித்தனர்.
இளைஞனின் கையில் இருந்தது தண்ணீர் போத்தல் என தெரியவந்தது. Np Vp 4490 என்ற மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன், உரும்பிராய் பகுதியைச்சேர்ந்த 21வயதானவர் என தெரியவந்தது.
இதனையடுத்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இது பல்கலைக்கழக வாசலில் இடம்பெற்ற காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்குள் இந்த பிரச்சினையை கொண்டு வரவேண்டாம் வெளியில் வைத்து பிரச்சினையை தீருங்கள் என பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களிடம் கடுமையான தொனியில் கூறியுள்ளனர் .
மேலும் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகள் இது தொடர்பாக இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களின் இவ்வாறான பதிலையடுத்து மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இது தொடர்பாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில் குறித்த இளைஞன் திடீரென வந்த மோட்டார் சைக்கிளில் மாணவர்களின் பிடியிலிருந்து தப்பி ஓடி சென்று ஏறி சென்றுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனின் புகைப்படத்தையும் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகனத்தின் உடைய இலக்கத்தையும் புகைப்படத்தையும் எடுத்துச் சொன்றதோடு மாணவர்களின் வாக்கு மூலத்தையும் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த இளைஞன் மாணவியின் முன்னாள் காதலன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
