புதினங்களின் சங்கமம்

யாழில் புடவைக்கடை முதலாளியின் கள்ளக்காதலைத் கண்டித்த மகள் மீது முதலாளி தாக்குதல்!! மருமகன் பொலிசாரிடம் முறைப்பாடு!!

யாழ் நகரப்பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் 56 வயது முதலாளி தாக்கி அவரது 27 வயதான திருமணமான மகள் முகத்தில் வீக்கத்துடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெளியேறியுள்ளார். மகளின் கணவன் இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் இருந்தும் பொலிசார் இச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காது சமாதானப்படுத்த முற்படுவதாகவும் மருமகன் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த முதலாளியினது புடவைக்கடையில் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் வேலை செய்த பெண் ஒருவருடனேயே முதலாளி களளத் தொடர்பு வைத்துள்ளார். குறித்த பெண் அவரது கடையில் வேலை செய்து கொண்டிருந்த போதும் கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும் இதனை அறிந்து முதலாளியின் மனைவி குறித்த பெண்ணை கடையிலிருந்து துரத்தியதாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னரும முதலாளி குறித்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பைப் பேணி வந்துள்ளார். இந் நிலையில், கடந்த ஞாயிறு முதலாளிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் இவர்கள் ஒன்றாகத் தங்கியிருந்ததை அறிந்து அங்கு விரைந்து சென்ற முதலாளியின் திருமணமான மகள் அவர்களை கையும் மெய்யுமாக பிடித்ததுடன் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளார். இதனையடுத்தே முதலாளி தனது மகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் கன்னப்பகுதி மற்றும் கண்கள் மறைக்கப்பட்டு வீங்கிய நிலையில் தனியார் வைத்தியசாலையில் மகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார். இதனை அறிந்து கொழும்பிலிருந்து வந்த கணவன், தனது மாமனாருக்கு எதிராக நேற்று பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் தற்போது முறைப்பாட்டை விலக்கிக் கொள்ளுமாறு பொலிஸ் தரப்பால் மருமகனுக்கு கூறப்பட்டு வருவதாகவும் அறியவருகின்றது.