இங்கிலாந்தில் வசிக்கும் யாழ்ப்பாண கஜன் சிங்கள வைத்தியரின் மனைவியுடன் லீலை!! வைத்தியர் பொலிசில் முறைப்பாடு!!
இங்கிலாந்தில் பிறிஸ்டல் பகுதியில் வர்த்தகராக உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதாக கஜன் எனும் குடும்பஸ்தர் தொடர்பாக சிங்கள வைத்தியர் ஒருவர் பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பாக கஜனின் மனைவியும் தனது கணவர் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
தனது மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற சிங்கள வைத்தியர் தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரையும் அங்கு அழைத்திருந்தார். இந் நிலையிலேயே அங்கு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் குடும்பஸ்தரான கஜனுடன் வைத்தியரின் மனைவி நட்பாகியதாகத் தெரியவருகின்றது. கடந்த ஆண்டு இறுதியில் வைத்தியர் இலங்கை வந்து தனது வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்து வைத்தியரின் மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார் கஜன். இதனை அறிந்த வைத்தியர் மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். இருந்தும் வைத்தியரின் மனைவி வைத்தியரின் எச்சரிக்கையை கணக்கில் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இதனால் கடுப்பாகிய வைத்தியர் கஜனின் மனைவிக்கு கஜனின் நடவடிக்கைகளை கூறியுள்ளார். கொழும்பில் கட்டடம் வாங்கப் போகின்றேன் என மனைவியிடம் கூறி இலங்கை வந்திருந்த கஜனை உடனடியாக இலங்கையை விட்டு வருமாறு மனைவி கூறியுள்ளார். இதனை கஜன் பொருட்படுத்தாமல் இருந்ததால் மனைவி உடனடியாக இலங்கை வந்ததாகத் தெரியவருகின்றது. இதன் பின்னரே கடும் சண்டை உருவாகியுள்ளது. கஜன் கொழும்பு கல்கிசைப் பகுதியில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டுக்கு மனைவி வந்துள்ளார். அங்கு கஜன் மனைவியைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. அத்துடன் குறித்த வீட்டுக்கு வைத்தியரும் வந்து கஜனின் மனைவியிடம் தனது மனைவிக்கும் கஜனுக்கும் இருக்கும் கள்ளத் தொடர்பு தொடர்பான வீடியோக்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து கஜன் வைத்தியரைத் தாக்கியுள்ளார். அத்துடன் தங்களது தனிப்பட்ட வீடியோவை வைத்திருப்பது தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக கஜன் வைத்தியரை எச்சரித்துள்ளார். இந் நிலையிலேயே வைத்தியரும் கஜனின் மனைவியும் தனித் தனியே பொலிசாரிடம் கஜனின் கள்ளத் தொடர்பு தொடர்பாகவும் தம்மை தாக்கியது தொடர்பாகவும் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. பொலிசாரிடம் முறையிட்ட அன்று இரவே கஜன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகவும் வைத்தியரின் மனைவியும் வைத்தியரை விட்டு பிரிந்து தனித்து வாழ்வதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் வைத்தியரின் மனைவி நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றதாக மீண்டும் வைத்தியர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

