புதினங்களின் சங்கமம்

அமெரிக்கா கொடுத்த அந்த ஆயுதம்.. ரஷ்ய பீரங்கிகளை தகர்த்து எறியும் உக்ரைன்.. என்ன நடக்கிறது? (Video)

கீவ்: உக்ரைனில் ரஷ்ய ராணுவம் இன்று 9 ஆவது நாளாக போரை தொடங்கி அந்த நாட்டிற்குள் நுழைந்த ரஷ்ய வீரர்களின் நவீன வகை பீரங்கி டாங்கிகளை அமெரிக்காவால் வழங்கப்பட்ட சிறிய அளவில் உள்ள ஜாவ்லின் டாங்கி ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவத்தினர் துவம்சம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் வியாழக்கிழமை உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா தொடங்கியது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐநா உள்ளிட்டவை கூறியும் கேட்காமல் போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் புடின்.
உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சோவியத் ரஷ்யாவில் இணைக்க வேண்டும் என கண்மூடித்தனமாக ரஷ்யா போரிட்டு வருகிறது. விமான படை மூலம் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது.
உக்ரைன் வீரர்களும் ரஷ்ய ராணுவத்தினருக்கு சளைக்காமல் போரிட்டு வருகிறார்கள். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைனை விட்டு வெளியேற மாட்டோம். சரணடைய மாட்டோம் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்று 9ஆவது நாளாக போர் நடைபெறும் நிலையில் உக்ரைனை எப்படி வீழ்த்தலாம் என ரஷ்ய பீரங்கிகள் ஓயாமல் பணியாற்றி வருகின்றன.
எனினும் உக்ரைன் அசராமல் முன்னோக்கி சென்று வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்கா கொடுத்த முக்கியதொரு ஆயுதம்தான் அங்கு கேம் சேஞ்சராக மாறியுள்ளது. அமெரிக்காவின் பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான எஃப்.ஜி.எம். 148 ஜாவ்லின் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இது சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் போல எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜாவ்லின் மூலம் ஏவுகணைகளை ஏவி மிக துல்லியமாக ரஷ்ய டாங்கிகளை உக்ரைன் வீரர்கள் தாக்கி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 80 டாங்கிகள், 516 ராணுவ வாகனங்கள், 10 போர் விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள், 2800 ராணுவ வீரர்களை இந்த ஜாவ்லின் துவம்சம் செய்துள்ளது. இதை உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
ரஷ்யாவின் டாங்கிகள் போரின் ஆரம்ப காலத்தில் எளிதாக நுழைந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ஜாவ்லின் ஏவுகணைகள் மூலம் டாங்கிகள் தகர்க்கப்படுவதால் அவை உக்ரைனுக்குள் எளிதாக செல்ல முடியவில்லை. அமெரிக்காவின் ஜாவ்லின் டாங்கியை 65 மீட்டர் முதல் 4000 மீட்டர் தூரம் வரை எறியலாம். இதன் நீளம் 1.2 மீட்டர் ஆகும்.
இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்தது. இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம் என்பதால் உக்ரைன் வீரர்கள் மகிழ்ச்சியிலும் தன்னம்பிக்கையிலும் குதிக்கிறார்கள். ஜாவ்லின மூலம் வெளியாகும் ராக்கெட்டுகள் 10 வினாடிகளில் தாக்கி அழிக்கும் வேகம் கொண்டவை. உக்ரைனுக்கு மேலும் 1500 ஜாவ்லின்களை அமெரிக்கா கொடுத்து உதவி இருக்கிறது. அமெரிக்காவின் ஜாவ்லினை உக்ரைன் பயன்படுத்தினாலும் ரஷ்யா தன்னிடம் இருக்கும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.
2014 ஆம் ஆண்டு கிரிமியாவுடன் ரஷ்யா இணைந்த போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற போது உக்ரைனுக்கு ஜாவ்லினை அமெரிக்கா சப்ளை செய்யவில்லை. ஆனால் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உக்ரைனுக்கு ஜாவ்லினை சப்ளை செய்யும் பணி தொடங்கியது.