முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இளைஞர்களை கடத்திச் சென்ற டிப்பர், வடிகானொன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது கடத்தப்பட்ட இளைஞர்களையும் டிப்பருக்குள்ளேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




