உடலுறவின்போது மாரடைப்பு, இளைஞர் மரணம்; காரணம் என்ன?

உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுவது அரிது, ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இளைஞர்களிடம், கண்டறியப்படாத இதயநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கடினமான வேலைகளைச் செய்யும்போதோ, உடலுறவின்போதோ இப்படி நிகழலாம்.’

தன் காதலியோடு உடலுறவில் ஈடுபட்டபோது, காதலன் இறந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நாக்பூரை சேர்ந்த 28 வயதான இளைஞரும், அவர் காதலியான செவிலியரும் காதலித்து வந்தனர். மூன்று வருடங்களாக உறவில் உள்ளனர். முகநூலில் பழக்கமான இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் ஒரு ஹோட்டலில் உடலுறவில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில், எந்த அசைவும் இல்லாமல் காதலன் சரிந்து விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ந்து போன காதலி, உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனடியாக அந்த இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்தது அறிவிக்கப்பட்டது.

இது குறித்து காவல் துறை உதவி ஆய்வாளர் தெரிவிக்கையில், ’இருவரும் உறவில் இருந்தபோது, இளைஞர் சரிந்து நினைவில்லாமல் கீழே விழுந்ததாக அந்தப் பெண் கூறினார். அதோடு நாங்கள் ஆராய்ந்ததில், எந்த மருந்தும் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. தற்போது உள்ளுறுப்பு பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்செயலாக ஏற்பட்ட மரணம் என்று இந்த வழக்கு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார். இன்னொரு பக்கம், சம்பந்தப்பட்ட இளைஞர் அதிகமாக வயாகரா பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

’உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுவது அரிது, ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இளைஞர்களிடம், கண்டறியப்படாத இதயநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கடினமான வேலைகளைச் செய்யும்போதோ, உடலுறவின்போதோ இப்படி நிகழலாம். கடினமான வேலைகளைச் செய்யும் போது, இதய தசைகளுக்கு அதிகப்படியான ரத்தமும், ஆக்சிஜனும் தேவைப்படும்’ என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி – விகடன்

error

Enjoy this blog? Please spread the word :)