யாழ்ப்பாணம் உட்பட வட பகுதி சிறுவர்கள், மாணவர்களுக்கு லட்சங்களில் நிதி உதவி….. பகிருங்கள் வாசகர்களே….!!
வட பகுதிச் சிறுவர்கள், மாணவர்களின் உள, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சிறுவயதிலேயே அவர்களை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றுவதற்காக புலம்பெயர் தமிழ் கோடீஸ்வரர் பல கோடி ரூபாக்களை ஒதுக்கியுள்ளார். அமரத்துவமடைந்த தனது பெற்றோரின் நினைவுப் பரிசாக வடபகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள், சனசமூகநிலையங்கள் மற்றும் வடபகுதியில் செயற்படும் சிறுவர்கள் ஒன்றினைந்து கூடும் நிறுவனங்களுக்கு ஊஞ்சல்கள் மற்றும் சிறுவர்களின் உள, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய விளையாட்டுப் பொருட்களை இலவசமாக வழக்கவுள்ளார்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவர்களின் நிறுவனத்தின் ஆளுமையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆகக் குறைந்தது ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் குறித்த விளையாட்டுப் பொருட்கள் வழங்க முன்வந்துள்ளார். இவற்றினைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுடன் தொடர்புபட்ட பாடசாலைகள் மற்றும் தனியார், பொது நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் நடைபெறும் சிறுவர்கள் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களுடன் நிறுவனத்தைப் பதிவு செய்திருந்தால் அதற்குரிய ஆதாரங்கள் அல்லது கிராமசேவகரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் உங்களது நிறுவனத்தின் அல்லது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0742366432 எனும் இலங்கையில் உள்ள எமது இணைப்பாளரின் இலக்கத்திற்கு (குறுந்தகவல் மட்டும்) அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தயவு செய்து இந்தப் பதிவைப் பார்வையிடும் வடபகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஏனையவர்களுக்கும் தெரிவித்து ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். விளையாட்டு உபகரணங்களைப் இலவசமாக பெற விரும்புபவர்கள் முதலில் நிறுவனத்தின் பெயர் விபரங்களுடன் உடனடியாகத் குறித்தி மின்னஞ்சல் அல்லது பேஸ்புக் முகவரியுடன் தொடர்பு கொண்டு பதிவினை மேற்கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களது நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை எமக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஏற்கனவே விளையாட்டு பொருட்களை பெறுவதற்கு ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பத்தம் செய்திருந்தால் அவற்றையும் ஆதாரங்களுடன் எமக்கு அனுப்புங்கள். அவற்றுக்கான பெறுமதி அல்லது பகுதியளவான பெறுமதியான பணம் வழங்கப்படும். புலம் பெயர்ந்து வாழும் அன்பு உறவுகளுக்கு ஒரு விண்ணப்பம்…. ஈழத்தில் உள்ள எமது தமிழ் உறவுகளின் சிறுவர்கள், மாணவர்களின் உள, உடல் செயற்பாட்டை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறான உபகரணங்களை நீங்கள் வழங்க விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் நியாயமான விலை, உத்தரவாதங்களுடன் உங்களுக்கு செய்து தருவோம் என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
குறிப்பு – சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தாயாரிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலமே இவற்றை தயாரித்து வழங்கி அவர்களுக்கும் ஊக்கத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆகவே இவற்றைத் தயாரிப்பதில் திறமையுள்ளவர்கள் தாங்கள் இதுவரை தயாரித்தவற்றை புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களுடன் [email protected] என்னும் முகவரிக்கு அல்லது 0742366432 எனும் இலங்கையில் உள்ள எமது இணைப்பாளரின் இலக்கத்திற்கு (குறுந்தகவல் மட்டும்) அல் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி
இது ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த பதிவாகும். அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம்.











