புதினங்களின் சங்கமம்

யாழ் திருநெல்வேலியில் இன்று அதிகாலை விபத்து – நால்வர் படுகாயம் (Photos)

திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகில் பலாலி வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பட்டா ரக வாகனமும், மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.