அவுஸ்திரேலியாவில் சாதித்த தமிழ் பெண் சிவசங்கரி !
மலேசியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண் இந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் நடந்த பெகா Country Club போட்டியில் சுப்பிரமணியம் கனியப்பன் மற்றும் வள்ளி நாகப்பன் ஆகியோரின் 20 வயதான மகள் எஸ்.சிவசங்கரி, ஜப்பானின் சடோமி வாட்டனபிள் என்பவரை தோற்கடித்தார்.
அவர் தனது போட்டியாளரை 5-11, 11-9, 11-9, 11-9 என்ற கணக்கில் 39 நிமிடங்களில் தோற்கடித்து பட்டத்தை வென்றுள்ளார்.
சிவசங்கரி என்பவர் மலேசியாவின் இளைய தேசிய சாம்பியன்களில் ஒருவராகும்.
மலேசியாவில் உள்ள கெடாவில் பிறந்த சிவசங்கரி, தற்போது அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் வாழ்க்கை அறிவியல் படித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

