யாழில் லீவு நாட்களில் பாடசாலைக்கு ரீச்சரை அடிக்கடி அழைக்கும் அதிபர்!! புருசனுக்கு ஏற்பட்ட சந்தேகம்!!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள இடைநிலைப் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 34 வயதான ஆசிரியையை பாடசாலை அதிபர் லீவுநாட்களிலும் பாடசாலைக்கு அழைத்து ஓ.எல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந் நிலையில் ஆசிரியையின் கணவர் அதிபரின் இவ்வாறான நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஆசிரியை பாடசாலைக்கு சென்ற பின் தானும் அங்கு சென்றுள்ளார். பாடசாலையின் வாசல் வழியாகச் செல்லாது பாடசாலையின் பின் பகுதியில் உள்ள சிறிய மைதானத்தின் வேலிப்பகுதியில் சிறு துவாரம் இட்டு உள்ளே நுழைந்துள்ளார். பாடசாலைக்குள் இனந்தெரியாத நபர் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைவதை அவதானித்த அப்பகுதி தோட்டங்களில் நின்ற சிலர் அவரை விசாரிக்க முற்பட்ட போது அவர் அங்கிருந்து ஓட முற்படவே கலைத்துப் பிடித்து கட்டி வைத்தபின் பாடசாலையில் நின்ற அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
அதிபர்இ மற்றும் குறித்த நபரின் மனைவியான ஆசிரியை மற்றும் சில ஒ.எல் மாணவர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்த போது ஆசிரியையின் கணவர் கள்ளன் போல் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போது ‘லீவு நாட்களிலும் ஆசிரிi பாடசாலைக்குச் செல்வதால் தான் வெறுப்படைந்து வீட்டில் வேலை செய்யாமல் பாடசாலைக்கு சும்மா சென்று பொழுது போக்குகின்றாரா என அவதானிப்பதற்கு வந்ததாக கூறியுள்ளார். குறித்த நபரைக் கட்டி வைத்தவர்கள் அவரின் சந்தேகம் என்ன என்பதை அறிந்து அவ்விடத்தை விட்டு அகன்ற பின் மனைவி தனது கணவரின் கட்டை அவிழ்த்து விட்டு கடும் கோபத்துடன் வீடு சென்றதாகத் தெரியவருகின்றது. குறித்த நபர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்துவிட்டு தற்போது வேலையில்லாது இருப்பதாகவும் இவர்களுக்கு 2 பிள்ளைகள் எனவும் தெரியவருகின்றது.

