புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணால் 32 வயது சிறிறஞ்சன் கொல்லப்பட்ட காட்சிகள் இதோ!!(Video)

வவுனியா, மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15.02) காலை 8.45 மணியளவில் இவ் மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கணேசபுரம் பகுதியிலிருந்து மரக்காரம்பளை வீதியூடாக பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒழுங்கை ஒன்றிற்குள் திரும்ப முற்பட்டுள்ளது. இதன் போது எதிர்த்திசையில் வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள், பெண் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளின் சாரதியான பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரு மோட்டார் சைக்கிளின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video click here

May be an image of 2 people, motorcycle, road and text
May be an image of 2 people and text