புதினங்களின் சங்கமம்

பிலியந்தலை பகுதியில் பல மாடுகளையும் நாய்களையும் தின்ற 13 அடி நீள முதலை சிக்கியது!!

பிலியந்தலை பகுதியில் பல மாடுகளையும் நாய்களையும் தின்று கொண்டிருந்த முதலையை மேலத்தரா கால்வாயில் வனவிலங்கு அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஏராளமான பசுக்கள் மற்றும் நாய்கள் திடீரென காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தியதில், இந்த விலங்குகளை குறித்த முதலையே சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய அறிவித்தலின்படி, அவர்கள் கால்வாயில் கூண்டு அமைத்து, சுமார் 13 அடி நீளம் கொண்ட குறித்த  முதலையை உயிருடன் பிடித்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் தலைமை அலுவலக சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் அத்திடிய வனவிலங்கு வைத்தியசாலையின் சுகாதார பிரிவினர் இணைந்து முதலையை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.