இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நடந்த சம்பவமே விடுதலைப் புலிகளின் மறைவுக்கு வித்திட்டதா?
இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை
செய்யப்பட்ட நாள்!,
ராஜிவின் கொலை பலரால் நியாயப்படுத்தவும் பலரால்
கண்டிக்கத்தக்கதாகவும் இருந்து வருகின்றது!
இந்தக்கொலை தொடர்பாக எந்த நீதி நியாயங்கள்
கண்டனங்கள் பற்றி நான் பேசவரவில்லை!
ராஜிவ்காந்தியின் கொலைக்குப்பின்னால் உள்நாட்டு
சர்வதேச சக்திகள் இருக்கலாம் ,இருக்கிறது என்றே
வைத்துக்கொள்வோம், அவர்களின் வலைக்குள்
விடுதலைப்புலிகள் சிக்கினார்கள், சிக்கவைக்கப்
பட்டார்கள்!அல்லது அவர்களே தன்னிச்சையாக
பழிவாங்கல் நடவடிக்கையாக செய்திருக்கலாம்
புலிகளைத்தவிர யாரும் எதுவும் இதுதான் நடந்தது
என்று கூறிவிடமுடியாது
இந்தக்கொலை நடந்தது தொடர்பாக புலிகள் தாங்கள்தான்
செய்தது என்றோ அல்லது இதற்கும் எங்களுக்கும் எந்தத்
தொடர்புகளுமில்லை என்று எந்த அறிக்கைகளையும்
உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை, ஈழமுரசு போன்ற
உள்ளூர் பத்திரிகைகளில் மட்டும் அவை வெளியாகின,
தெரிந்தோ தெரியாமலோ சிக்கிய,சிக்கவைக்கப்பட்ட
புலிகள் மீண்டும் பாரிய தவறைச் செய்தனர் என்றால்
மிகையாகாது, அவர்கள் நடத்திய பத்திரிகையாளர்
மகாநாட்டில் ராஜிவ் கொலை ஒரு துன்பியல் சம்பவம்
எனக்கூறி சாதாரணமாக கடந்து சென்றார்கள், ஆனால்
இந்தியா அந்தச் சொல்லை சாதாரணமாக எடுத்துக்
கொள்ளவில்லை என்பதே அதன்பிறகு எடுத்துக் கொண்ட
நடவடிக்கைகள் இனங்காட்டின!
அந்தச் சொல்லாடல்களுக்குப் பின்னரே புலிகள் அழிக்கப்
படவேண்டும் என்ற எண்ணம் இந்திவுக்கு உத்வேகமெடுத்தது
என்பதை யாரும் மறுக்க முடியாது!
அதன் பிறகு நடந்தவைகளெல்லாம் திட்டமிட்டபடி
அட்சரம் தவறாமல் நிகழ்த்தப்பட்டது!
ராஜிவ் காந்திக்கு தான் கொல்லப்படுவேன் என்பது முதலே
தெரிந்திருக்கின்றது, அது எப்போது என்பதும்
யாரால் என்பதும் தெரியாமல் போனதும் சோகம்!
அவரது கொலையில் சுப்பிரமணியசுவாமி, சந்திராசுவாமி
போன்றவர்கள் மீது சந்தேகங்கள் இருந்தது, ராஜிவ்
கொல்லப்படுவதற்கு முன்னரே சுப்பிரமணியசுவாமி
தன்னுடன்சென்னையிலிருந்து தொலைபேசியில்
பேசியவரைக் கேட்டது சம்பவம் முடிந்துவிட்டதா என?
இதை விசாரணையின் போது தெரிவித்த போதிலும்
எவரும் அதைக்கவனத்தில் எடுக்கவில்லை என்பது அடுத்து
வந்த விசாரணைகள் எப்படிச் செல்லும் என இனங்காட்டின!
அதே போல ராஜிவ் கொலை செய்யப்பட்டபோது அவருக்கருகில
அவரது கட்சிக்கார்ர்களோ, கூட்டணிக்கட்சியான் அதிமுக
கட்சிக்கார்ர்களோ இருக்கவில்லை, குறிப்பாக ராஜிவுடன்
ஒட்டித்திரிந்த மூப்பனாரும் மரகதம் சந்திரசேகரும் அந்த
இடத்தில் இல்லை, குறிப்பாக ஶ்ரீபெரும்புதூர் தொகுதி
வேட்பாளர் கூட அருகில் இல்லை அது ஏன் என்று
விசாரிக்கப்படவுமில்லை!
புலிகள் ராஜிவைக் கொலை செய்தார்களோ இல்லையோ
அந்தப்பழி அவர்கள் மீது பொறிக்கப்பட்டுவிட்டது, அவர்களால்
அதிலிருந்து மீளமுடியவில்லை அல்லது அதற்கான முயற்சிகளை
அவர்கள் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்!
ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு
முன்னர் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொடுத்த
பதில் எல்லாவற்றையும் புரியவைக்கும் எனநம்புகிறேன்!
எது எப்படியோ ராஜிவ் காந்தியின் கொலை ஈழத்தமிழர்களை
படுபாதளத்தில் தள்ளிவிட்டது என்ற உண்மையை எவராலும்
மறுக்க முடியாது,
######################################
நன்றி: Shalin Maria Lawrence
பக்கத்திலிருந்து பகிரப்படுகின்றது இந்தப்பேட்டி
மே 21 1991,
ஒரு சிறு விமானத்தில் சென்னை வந்தடைகிறார் ராஜிவ் காந்தி.
பின்பு அங்கிருந்து ஒரு அம்பாசிடர் காரில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லுகிறார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற டெக்கான் க்ரோனிக்கள் பத்ரிக்கையின் செய்தியாளர் நீனா கோபால் அவரின் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை என்பதனை கண்டு
“உங்களுக்கு உயிர் பயம் இல்லயா” என்று கேட்கிறார்.
அதற்கு ராஜிவ் கூறிய பதில் “எனக்கு தெரியும் நான் கொல்லபடுவேன். ஏனென்றால் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் .எப்பொழுதெல்லாம் தெற்காசியாவை சேர்ந்த ஒரு தலைவர் உலக அரங்கில் தன் நாட்டுக்காக ஏதாவது பெரிதாக செய்ய முற்படுகிறாரோ ,இல்லை முக்கியத்துவம் பெறுகிறாரோ அப்பொழுது அவர் கொல்லப்படுகிறார்.குறிப்பாக ஜியா உல் ஹக் ,பண்டாரநாயகே,சுல்பிகர் அலி பூட்டோ ,இந்திரா காந்தி ,முஜிபுர் ரஹ்மான் எப்படி கொடூரமாக கொல்லபட்டார்கள்.ஆகவே நானும் கொல்லப்படுவேன்”
இதை சொல்லி 30 நிமிடத்தில் ராஜிவ் காந்தி புலிகளால் கொல்லப்படுகிறார்.
ராஜிவ் காந்தி கடைசியாக பேசிய அந்த உலக அரசியல் தான் நான் கவனிக்கிற ,நான் அதிகம் ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல்.நம்மை பாதிக்கும் அரசியல்.
The blame game and the micro politics around it are all mere diversions.
நன்றி
facebook post