யாழ் வரணியில் சாதிப் பிரச்சனையால் கேவலம்!! கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது (Video)
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் குறித்த வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது தாழ்ந்த சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பைக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.