இலங்கையில் கொரோனாவின் கோரத்துக்கு மேலும் ஒரு பெண் பலி!! 24வது மரணம்!!
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு – 13 ஐச் சேர்ந்த 78 வயதுடைய பெண் வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த வயோதிப பெண்ணின் உயிரிரிழப்பிற்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அவ்வாறு கொரோனா மரணமாக உறுதி செய்யப்படுமாயின் இதுவரை கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட 24வது மரணமாக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

