இன்றைய இராசி பலன் (21.05.2019)
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.
சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி: கடந்த கால சுகமானஅனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்துமகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத் துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றியாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
மகரம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புது வேலைக்கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுப்பொருள் சேரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.