கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக விளைச்சலில் பெரும் வீழ்ச்சி!
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெரும்போக பயிர்செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில். தற்பொழுது ஒரு ஏக்கர்,(1) அறுவடைக்கு 12 தொடக்கம் 15 வரையான மூட்டைகளே அறுவடையினை பெற முடிந்துள்ளது.
இம்முறை இயற்கை எமக்கு கை கொடுத்துள்ளபோதிலும் அரசாங்கத்தினர் தமக்கு இரசாயன உரம் வழங்கப்படாமையின் காரணமாகவே எமது காலபோகபயிர்நெய்கையில் பெரும் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்தவருடம் ஒரு ஏக்கர் பயிர்செய்கையின் மூலம் 30தொடக்கம் 40வரையான மூட்டைகள் அறுவடையில் பெறப்பட்டன.
இருப்பினும் இம் முறை அரசாங்கத்தினால் கமநலசேவையின் ஊடாக வழங்கப்பட்ட சேதன உரம் மற்றும் நோயிதறேட் உரம் என்பனவற்றையே”பயன்படுத்தியதாகவும் அதன்,காரணமாக எமக்கு எந்த பலனும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலை தொடருமாயின் காலபோக பயிர்செய்கையினை புறக்கணிக்கபோவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
