புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 32 வயதான நேர்சரி ஆசிரியை ஜெயசீலி சடலமாக மீட்பு!! தவறான நடத்தை?? கொலை என சந்தேகம்!! !!(Photos)

கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான வகையில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார்.

கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் குறித்த பெண் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.

நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர்.

அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல வீட்டில் நின்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் மரணமடைந்தமை இன்று காலை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

குறித்த ஆசிரியை வீட்டுக்கு இரவு வேளைகளில் இனந்தெரியாத பலர் வந்து செல்வதாக அயலவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

May be an image of 1 person, standing and indoorMay be an image of 6 people and outdoorsMay be an image of 11 people, people standing, outdoors and tree