கொழும்பில் பெண் லோயர் ஜயனியை கழுத்தறுத்து கொன்ற சாரதி!!
நுகேகொட கங்கொடவில பகிரிவத்த வீதியில் சட்டத்தரணி ஒருவர் வீட்டினுள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முத்து ஆர்த்துரே ஜயனி டி சில்வா (வயது 35) எனவும், உயிரிழந்த சட்டத்தரணியின் கீழ் பணிபுரிந்த சாரதியால் கொல்லப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை கைது செய்வதற்காக மிரிஹான தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.