இயக்கத் தளபதி பொட்டம்மான் பிறந்த ஊரான நல்லுார் நாயன்மார்கட்டில் வாக்குச் சீட்டை கிழித்த இளைஞன் கைது!! ஏன் கிழித்தான்?
யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் , தனது வாக்காளர் அட்டையை , காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது , அதனை கிழித்துள்ளார்.
அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து , பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.</அவர் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பகுதியை கிழித்து வாக்குப் பெட்டிக்குள் இட்டுவிட்டு, கீழ்ப்பகுதியை கிழித்து வந்து, தேர்தல் கடமையிலிருந்த உத்தியோகத்தர்களிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அறியாமையினால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நல்லுார் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசலைக்கு அருகிலேயே புலிகளின் புலனாய்வுத் தளபதி பொட்டுஅம்மானின் பூர்வீக வீடு உள்ளதும் குறித்த பாடசாலையிலேயே பொட்டு அம்மான் ஆரம்பக் கல்வியைப் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.