யாழ் மாதகல் பகுதியில் பொல்லுகள், தடிகளுடன் கடற்படையினர்!! மக்கள் பெரும்அச்சம்!! (Photos)
யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறைப் பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்குச் சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை, கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.



