அந்தரங்கப் பகுதியில் பச்சை குத்த வற்புறுத்திய காமுகன்!! சட்டக்கல்லூரி மாணவி பலி!! (Photos)

கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் மொஃபியா பர்வின் (21). இவர் தொடுபுழாவில் உள்ள அல் அஸ்கர் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இவருக்கும் முஹம்மது சுபைல் என்பவருக்கும் முகநூல் வழியாகக் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மொஃபியாவுக்கும் முஹம்மது சுபைலுக்கும் வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது முஹம்மது சுபைல் வீட்டினர் வரதட்சணை வேண்டாம் எனக் கூறியுள்ளனர். பின்னர் 40 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டு மொஃபியாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரின் பெற்றோர் மொஃபியாவை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளதாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

ஆனால், கணவர் வீட்டினர் மொஃபியாவை மனநோயாளியாகச் சித்திரிக்க முயன்றுள்ளனர்.

இதற்கிடையே போலீஸில் அளித்த புகாரை அடுத்து வாக்குமூலம் கொடுப்பதற்காக கடந்த திங்கள்கிழமை ஆலுவா காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார் மொஃபியா. அங்கு ஆலுவா இன்ஸ்பெக்டர் சுதீர் என்பவர் மொஃபியாவை கிண்டல் செய்து பரிகசித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மனம் உடைந்த மொஃபியா வீட்டுக்குச் சென்றவுடன் கடந்த நவம்பர் 22ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

மொஃபியாவின் தற்கொலைக்குக் கணவர் வீட்டினரின் வரதட்சணை கொடுமையும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிகாசமுமே காரணம் என அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். தனது மரணத்துக்கு கணவர் வீட்டாரும், போலீஸ் அதிகாரியும்தான் காரணம் என மொஃபியா கடிதத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஜஸ்டிஸ் ஆன்டனி டொமினிக் உத்தரவிட்டிருந்தார். மேலும் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மொஃபியா தற்கொலை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மொஃபியாவின் கணவர் முஹம்மது சுபைல் (27), இவரின் தாய் ரூகியா (55), தந்தை யூஸப் (63) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு காக்கநாடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலுவா டி.எஸ்.பி சிவன்குட்டி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

மொஃபியா பர்வின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. மேலும் சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மொஃபியாவின் கணவர் குடும்பத்தினர் மட்டுமல்ல, போலீஸ் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமையால் உயிர்விட்ட உத்ரா, விஸ்மயா போன்றோர் வரிசையில் மொஃபியா பர்வின் வழக்கும் சேர்ந்துள்ளது.

இதற்கிடையில், மொஃபியா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

கணவரின் குடும்பத்திற்கு எதிராக மொஃபியாவின் பெற்றோர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை அறிக்கை அங்கீகரிக்கிறது.

மொஃபியா தனது கணவர் வீட்டில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானதாக ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனும் பெற்றோரும் மொஃபியாவை அடிமையாக வேலை செய்ய வைத்தனர். மாமியார் தொடர்ந்து அவரை துன்புறுத்தி வந்தார். இவரது கணவர் சுஹைல் பாலியல் வக்கிரத்திற்கு அடிமையானவர். அவர் மொஃபியாவை பலமுறை காயப்படுத்தினார். கணவரின் குடும்பத்தினர் அவரை மனநோயாளி என முத்திரை குத்தியுள்ளனர்.சுஹைலின் குடும்பத்தினர் வரதட்சணையாக ரூ.40 லட்சம் கேட்டுள்ளனர். தொகையை செலுத்தாததால் அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் இறந்த சிறிது நேரத்திலேயே, மொஃபியா கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானதை அவரது வகுப்பு தோழர்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். அந்தரங்க உறுப்புகளில் பச்சை குத்தும்படி அவரது கணவர் வற்புறுத்தியுள்ளார். அவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர்களும் குற்றம் சாட்டினர்.

அத்துடன், குற்றச்சாட்டிற்கு இலக்கான சி.எல்.சுதீர் என்ற பொலிஸ் அதிகாரி இடைநீக்கப்பட்டுள்ளார்.

 

error

Enjoy this blog? Please spread the word :)