புதினங்களின் சங்கமம்மருத்துவச் செய்திகள்

4 கோடி மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கப் போகும் ஆபத்து!! அதிர்ச்சித் தகவல்கள்!!

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் 2025 மற்றும் 2050 க்கு இடையில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

‘தி லான்காஸ்ட்’ இதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில், இந்நிலைமைக்கு ‘சூப்பர்பக் நெருக்கடி’ என்று பெயரிட்டுள்ளது.

மருந்து-எதிர்ப்பு நுண்ணுயிர் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியானது உலகளாவிய பொது சுகாதார அபாயம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏறக்குறைய 520 மில்லியன் மக்களைப் பயன்படுத்தி நீண்ட பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையில், இந்த நெருக்கடியின் மிகப்பெரிய தாக்கம் முதியவர்கள் மீது இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.