மன்னார் கடற்கரையில் யுவதியின் சடலம் மீட்பு! இளைஞனுடன் சுற்றும் CCTV காட்சிகளும் வெளியாகின!! (video)

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் இன்று (13) சனிக்கிழமை காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று (13) சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள கடற்கரையோரமாக சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மிதப்பதை அவதானித்த மக்கள் கிராம அலுவலகர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு,மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
-குறித்த சடலம் தற்போது அடையாளம் காணப்படாத நிலையில்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி முழுமையான ரோஸ் நிற உடை அணிந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பிரதான பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of 8 people, people standing and outdoors May be an image of tree, body of water and natureNo photo description available.

error

Enjoy this blog? Please spread the word :)