Home புதினங்களின் சங்கமம் யாழ் நிலாவரையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

யாழ் நிலாவரையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலாவரை நவக்கிரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி போலீசார் தெரிவித்தனர்.
15 போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய இரண்டு நபர்களும் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மாலை இவர்கள் பயணித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது இவர்களிடமிருந்து 15 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் தொடர்ச்சியாக இந்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளனர்.