புதினங்களின் சங்கமம்

யாழில் பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தை மரணம்! தாயாருக்கு கொரோனா!

பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழந்துள்ளமை தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி நாளை விசாரணை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த அகரன் என்ற ஒரு மாதமேயான குழந்தை வீட்டில் உயிரிழந்த குழந்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி குழந்தையின் தாய்க்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பிசிஆர் மாதிரிகள் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது குழந்தைக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரியால் குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி, பிரேத பரிசோதனையை நாளை மேற்கொள்ளவுள்ளார் அதன் பின்னரேயே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.