யாழ். பல்கலை பிரதான வாயிலில் விளக்கேற்றி மாணவர்கள் அஞ்சலி!
யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலில் விளக்கேற்றி இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாணவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக இன்று மாலையே யாழ். பல்கலைக்கழக வாயில்களில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் பிரதான வாயிலில் அவர்களில் காவலில் இல்லாத சமயம் தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதை அறிந்து அங்கு விரைந்த பொலிஸார் மாணவர்களது விபரங்களைச் சேகரித்ததுடன், புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

