புதினங்களின் சங்கமம்பெண்கள்

கொழும்பு வாழ் தமிழ்க் குடும்பப் பெண் அபி துசிக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம்!! தயவு செய்து வாசித்துவிட்டு பகிருங்கள்!!

abithushy என்பவரது முகப்புத்தகத்தில் வெளிவந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
“கொரோனாவாவது கொக்காவாது “
“Vaccine எல்லாம் பொய்
medical mafia “
⭐️ கடந்த வாரம் ஒரு குடும்பமே தொற்றுக்குள்ளான நிலையில் சில மருந்து பொருட்களை வீட்டு வாயிலில் வைத்து கொடுத்து விட்டு வீடு வந்து குளித்து ஆவியும் பிடித்து, வாய் கொப்பிளித்து ( mouth wash உபயோகித்து) சாப்பிட்டு விட்டு sofa ல் இருந்த எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, phone அடிக்கிறது , அதை எடுக்க முடியவில்லை ஒருநாளும் அனுபவிக்காத அளவிற்கு உடல் வலி , ஏன் இப்பிடி வலிக்கிறது? நான் செத்து போய்டனோ ? ? என எண்ணினேன்
ஒரு நாளும் அனுபவிக்காத வலி வேதனை என்னவோ செய்கிறது !
ஆனால் Tv வேலை செய்து கொண்டு இருக்கிறது தெரிகிறது? ஓ … அப்ப உயிருடன் தான் இருக்கிறேன் ?
24 மணிநேரம் சரியான வலி இருந்தது அடுத்த நாளில் இருந்து நான் இன்று வரை உயிருடன் இருப்பது மட்டுமண்றி? இப்பொழுது ஒருவித வலியும் இல்லை. ஆனால் ளதோ சோர்வு மனச்சோர்வோ, உடல் அசதியோ இருக்கிறது. என்னவாக இருக்கும் ? ஒருநாளும் அனுபவிக்காத வலி என்றால் இது தானே புதிது ? தெரியவல்லையே ?!
2 vaccine ம் போட்டிருந்ததால் தப்பி விட்டேனோ ? பல குடிநீர்களும் குடித்தேன்.
?“கொரோனாவாவது கொக்காவாது
Vaccine எல்லாம் பொய் ,
medical mafia “?
இப்பிடி சொல்லித்திரிந்த பலர் 3 வது 4 வது அலையில் மாட்டியுள்ளனர்.
முதல் இரண்டு அலைகளில் அவர்கள் மாட்டுப்படவில்லை என்றதும், இப்பிடி எல்லாம் பிதற்றி mask கூட போடாது வேறு சுற்றி திரிந்தனர். அவர்களில் பலர் 3 வது அலையில் மாட்டிக்கொண்டனர். Vaccine போடாது பிதற்றிய பலர் இப்பொழுது 4 வது அலையில் நோயால் அவதிப்பட்டு மருத்துவமனை அனுமதி கூட கிடைக்காமல் தவிப்பதை பார்க்கும் போது அழுவதை தவிர வேறு வழியில்லை.
Vaccine போடவில்லையா என கேட்டால், “விவேக் செத்தார் கம்பகாவில் 2 பேருக்கு blood clot செத்திட்டாங்க. “
பிறகு “சைனா காரன் ஊசிய எப்பிடி நம்புறது,” “வெளிநாட்டில வருசம் வருசம் போடும் flu vaccine னே நான் போட்டதில்ல இங்க வந்து இத மண்ணாங்கட்டிய போட்டன்”
இவ்வாறு பல வீர வசனங்கள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு இருக்கும் இணை நோயை சாட்டி பலர் vaccine போடவில்லை.
அவர்களாவது வெளியில் திரிவதில்லை.
??? 30 வயதிற்கு பேற்பட்டவர்கள் பலர் நொண்டி சாட்டை சொல்லி தவிர்தவர்கள் தண்டனைக்குரியவர்கள்
இப்பொழு சிலர் அனுபவிக்கிறார்கள், இவர்கள் தங்களுக்கு மட்டுமன்று வீட்டுல் உள்ள பெரியவர்களுக்கும் எமன்ளாக மாறிவிட்டனர்.
???