புதினங்களின் சங்கமம்

யாழ் ராஜா கிறீம் கவுஸ் முன் பிறந்தநாள் கொண்டாட முற்பட்ட காவாலிக்குழு!! வெட்டித் துரத்திய இன்னொரு காவாலி குழு!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியிலுள்ள ராஜா கிறீம்கவுசின் வெளிப்புறத்தில்  காவாலிக் குழு கேக்
வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வாளுடன் நுழைந்த இன்னொரு காவாலிக் குழுவொன்று
நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இன்று (12) மாலை இந்த சம்பவம் நடந்தது.

நாச்சிமார் கோயிலடியில் ராஜா கிறீம் கவுஸின் வெளிப்புறத்தில் இன்று மாலை சுமார் 10
வரையான காவாலிகள் குழு கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராகியது.
மோட்டார் சைக்கிளில் கேக் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இன்னொரு குழுவைச் சேர்ந்த 4 காவாலிகள், கேக்கை வாளால் வெட்டி சேதப்படுத்தினர். இதில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. ரௌடிக்குழு நுழைந்ததும்
இளைஞர்கள் தலைதெறிக்க தப்பியோடி விட்டனர்.

அட்டூழியத்தில் ஈடுபட்ட ரௌடிகள், கேக் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்
கொண்டு சென்று விட்டனர்.