புதினங்களின் சங்கமம்

யாழ் கல்வியங்காட்டில் சுப்பமார்க்கட் மீது காவாலிக் குழு பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! (Video)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது இன்றிரவு (12) வியாழக்கிழமை 06.40 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியஙகாடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்பொருள் அங்காடி மீது இன்றிரவு 06.40 மணிக்கு இலக்கம் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பல்பொருள் அங்காடி உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No description available.No description available.No description available.No description available.No description available.No description available.